பாகிஸ்தானில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று மதியம் பாகிஸ்தான் ராணுவ முகாமிலிருந்து ராவல்பிண்டி வந்தடைந்துள்ளார். ராவல்பிண்டியில் இருந்து லாகூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட உள்ளார்.

லாகூரில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் வாகா எல்லைக்கு வர உள்ளார். அதனால் வாகா எல்லையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அவரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் அங்கு செல்ல உள்ளார்.

Advertisement

மேலும் அபிநந்தன் வரவேற்க பஞ்சாப் மக்களும் கோலாகலமாக திரண்டுள்ளனர். அபிநந்தன் வாகா எல்லையை அடைந்தவுடன் முதலில் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார். பின்னர் ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக்கு அழைத்து செல்லப்படுவர்.

இதற்கிடையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அபிநந்தனை விடுவிக்கக்கூடாது எனத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், சாலை மார்க்கமாக வாகா எல்லையை நோக்கி அவர் கொண்டு வரப்பட்டார். மாலை 4 மணியளவில் அபிநந்தன் வாகா எல்லை வந்தாடைந்தார்.

Advertisement

அபிநந்தனை அட்டாரி எல்லையிலிருந்து வரவேற்க இந்திய விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் வீரர் அபிநந்தனை ஒப்படைப்பதற்கான எழுத்துபூர்வ நடைமுறைகளுக்கு ஒரு மணி நேரம் ஆகும்.

Advertisement

அதாவது இந்த நடைமுறைகள் முடிவடைய மாலை 5 மணி ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் பின்பு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்படும். வாகா எல்லையில் இன்னொரு ஆகஸ்ட் 15 சுதந்திர விழா போன்று மக்கள் கோலாகலமாக திரண்டுள்ளனர்.

Advertisement