மீராவை அபிராமி ஆஹா ஓஹோனு புகழ்ந்து பாத்திருக்கீங்களா.! பழைய ஷாக்கிங் வீடியோ.!

0
6916
Meera-Mithun-Abhirami
- Advertisement -

மீரா மிதுன் மற்றும் அபிராமிக்கும் இடையேயான சண்டை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீரா மிதுனும், அபிராமியும் ஒரு வழியாக சமாதானம் ஆகினர். அப்போது பேசிய மீரா மிதுன் அபிராமியை நான் தான் ஒரு மாடலாக உருவாக்கியவர் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் தான் இவர்களுக்கு இருந்த சம்மந்தம் என்னவென்றே ரசிகர்கள் அறிந்தனர். மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் நாடு பட்டத்தை வென்ற பிறகு ஒரு சில மிஸ் அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அந்த வகையில் 2017 ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டி நிகழ்ச்சியில் அபிராமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : வனிதாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருந்த ராபர்ட் மாஸ்டர்.! இப்போ ஏன் பொய் சொல்றார்.!

- Advertisement -

இப்படி துறை ரீதியாக அபிராமிக்கு, மீரா மிதுனை நன்றாகவே தெரியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மீரா மீதுன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அபிராமிக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் மீரா மிதுனை இந்த அளவிற்கு வெறுக்கிறார் அபிராமி. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை.

சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட மதுமிதாவிற்கு பதிலாக மீரா மிதுன் தான் வெளியேற வேண்டும் என்று அபிராமி கூறியிருந்தார். மீரா மிதுன் மீது இவ்வளவு வன்மம் உள்ள அபிராமி, மீரா மிதுனை ஆஹா ஓஹோனு புகழ்ந்த விடியோவை நீங்கள் பார்த்தால் ஷாக்காகி விடுவீர்கள்.

-விளம்பரம்-
Advertisement