‘எனக்கும் ராமராஜனுக்கும் தொடர்புன்னு’ – ராமராஜன் நளினி விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய திருமதி செல்வம் சீரியல் நடிகை.

0
236
abitha
- Advertisement -

ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு காரணமான நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல்
மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் படத்தில் நடித்து 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இவர் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியவர்.

-விளம்பரம்-

மேலும், அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனை தான். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்றளவும் ராமாஜனின் பாடல்கள் கிராமத்து வாசிகள் மத்தியில் கேட்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராமராஜன் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

- Advertisement -

ராமராஜன்-நளினி திருமணம்:

பின் ராமராஜன் அ தி மு க கட்சியில் இணைந்து தீவிர அரசியல்வாதியாக அவதாரமெடுத்தார். இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. பின் இவர்களுக்கு 2000 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகி விட்டது. தற்போது நளினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ராமராஜன்-நளினி விவாகரத்துக்கு காரணமான நடிகை:

இந்நிலையில் ராமராஜன்- நளினி விவாகரத்திற்கு காரணமானவர் நடிகை அபிதா தான் என்ற தகவல் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. ராமராஜுடன் சீறிவரும் காளை என்ற படத்தில் நடிகை அபிதா நடித்து இருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அபிதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ராமராஜன்- நளினி இவர்களுடைய விவாகரத்தின் போது தான் நானும் ராமராஜன் சேர்ந்து படத்தில் நடித்திருந்தோம்.

-விளம்பரம்-

அபிதா அளித்த பேட்டி:

அப்போது அவர்களுடைய விவாகரத்திற்கு நான் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் பலவிதமாக கூறியிருந்தார்கள். நான் நளினியை நேரில் கூட பார்த்ததில்லை. சூட்டிங் முடிந்த உடனே நான் என் அறைக்கு சென்று விடுவேன். நான் ராமராஜன் உடன் அவ்வளவாக பேசியது கூட கிடையாது. என்னைப் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்பி இருந்தார்கள். எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. அதற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். அப்போதுதான் திருமதி செல்வம் சீரியல் வாய்ப்பு வந்தது என்று கூறி இருந்தார்.

அபிதா திரைப்பயணம்:

மேலும், பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிதா. அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே இவர் சீரியல் பக்கம் திரும்பினார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மாரி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement