தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலின் நண்பராக நடித்த நடிகர் காலமாகியுள்ளார்.

உலக நாயகன் கமலஹாசன், தமிழ் திரை உலகை தாண்டி இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர். 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் தமிழ், தெலுகு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமலின் குள்ளமான உருவத்தின் ரகசியம் இன்று வரை ஒரு மிக பெரிய ஆச்சர்யமாக தான் உள்ளது.

Advertisement

இந்த படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் மோகன். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் யாசகம் கேட்கும் ஒரு சிவன் வேடத்தில் நடித்திருந்தார்.

நான் கடவுள் திரைப்படத்திற்கு வின்னர் இவர் அதிசய மனிதர்கள் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் காலப்போக்கில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. ஆனால் அங்கும் இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் திருப்பரங்குன்றம் பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருக்கிறார். அந்த ஊரில் பெரிய ரத வீதியில் இவர் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், இவர் அபூர்வ சகோதரர்கள் நான் கடவுள் போன்ற படத்தில் நடித்தவர் என்று பலருக்கும் தெரியவில்லை.யாசகம் பெரும் பணத்தில் இருந்து தன்னுடைய வாழ்க்கை நடத்தி வந்த இவரது உடல்நிலை சமீப காலமாக மோசம் அடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நபர் ஒருவர் இறந்திடந்துள்ளதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அது மோகன் என்று தெரியவந்தது.

Advertisement

பின்னர் சம்பவ இடத்திலிருந்து அவரது உடலை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விசாரணையில் மோகனுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தும் நடிகர் மோகன் வறுமையில் வாடி யாசகம் பெற்று கடைசியில் கேப்பாரு வீதியில் அனாதை போல இருந்துள்ளார்.

Advertisement