மீண்டும் கார் ரேசில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.

இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். அந்தவகையில் சமீபத்தில் ’24H’ கார்பந்தயம் துபாயில் நடந்தது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருந்தது. கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேசிங் டீம்’ என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார்.
அஜித் கார் ரேஸ்:
பின் நடந்து முடிந்த இந்த 991 பிரிவில் கார் ரேஸில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஸ்பெயினின் வலென்ஸியா நாட்டில் Porsche Sprint Challenge Southern European Series 2025 போட்டி நடைபெற்று இருக்கிறது. இதில் அஜித் குழுவினர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியில் அஜித் ஐந்தாவது சுற்றில் 14வது இடத்தை பெற்று இருந்தார்.
View this post on Instagram
அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து:
இந்த சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக ஆறாவது சுற்றில் அஜித் குமார் இரண்டு முறை கீழே விழுந்து இருக்கிறார். இது அவருடைய தவறால் நடக்கவில்லை. இருந்தும் விடாமுயற்சியுடன் அஜித்குமார் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார். இந்த விபத்தில் அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படாததால் மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் பலருமே இந்த விபத்தில் அஜித்திற்கு என்ன ஆச்சு? என்று கவலையில் கேட்டு இருக்கிறார்கள்.

சுரேஷ் சந்திரா பதிவு:
மேலும், அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து தொடர்பாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா போட்ட பதிவில், அஜித் நலமாக தான் இருக்கிறார். அவருக்காக அவர் மீது அக்கறையுடன் பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த Porsche Sprint Challenge Southern European Series 2025 போட்டியில் அஜித்குமார் இதுவரை ஓட்டியதிலேயே அதிவேகமான ஓட்டி வெறும் 1.38.40 நிமிடங்களில் சுற்றை நிறைவு செய்துள்ளார்.
This is the second incident within a month. Passion is powerful, but no ambition is worth more than life and family.
— Mastikhor 🤪 (@ventingout247) February 22, 2025
#Ajith needs to prioritize his safety before the thrill becomes a regret. 🙏🏻#AjithkumarRacing #GoodBadUgly
pic.twitter.com/5ZKj9ykEev
அஜித் திரைப்பயணம்:
கடைசியாக அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகி இருந்த விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது அஜித் அவர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் மீண்டும் நடிகை திரிஷா அஜித் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.






