துபாய் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த (குட்டி அசின்) பூர்ணா – தன் வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
484
poorna
- Advertisement -

நடிகை பூர்ணா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

இதையும் பாருங்க : நயன் – விக்கி திருமணம், முகூர்த்த நேரம், மண்டபம், யாருக்கெல்லாம் அழைப்பு – வெளியான தகவல்.

- Advertisement -

பூர்ணா திரைப்பயணம்:

தற்போது மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பூர்ணா நடிப்பில் வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக். இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

பூர்ணா நடித்த படம்:

இவர்களுடன் இதில் பூர்ணா, மதுஷாலினி நடித்து இருக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து இருந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பூர்ணா போட்ட பதிவு:

இதனை தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற படத்திலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி பூர்ணா நடித்து வருகிறார். இந்த நிலையில் பூர்ணா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், நடிகை பூர்ணா அவர்கள் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அதில் அவர்,

பூர்ணா திருமணம் செய்யும் நபர்:

குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் என் வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை பூர்ணா திருமணம் செய்து கொள்பவர் நபர் Shanid Asif Ali. இவர் UAE businessman ஆக இருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement