நடிகை ஸ்ரேயாவா இது -சிறு வயத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க. அறிய புகைப்படம்.

0
1916
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் மன்னிப்பு பத்திரிக்கை வெளியிட்ட சகுனி பட நடிகை – இது என்ன புது ட்ரெண்டா ?

- Advertisement -

திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிபிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement