அப்பாஸ்ஸின் மகன் மற்றும் மகள் இப்போ எப்படி இருகாங்க பாருங்க – அதுவும் அவரின் 21 வயது மகள் எப்படி இருக்கார் பாருங்க.

0
12694
abbas
- Advertisement -

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து.

-விளம்பரம்-

சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.அப்போது அவரது நண்பர்கள் மூலம் இயக்குனர் கதிருக்கு அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள்.

- Advertisement -

அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ்.இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை.

இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இப்படி ஒரு நிலையில் இவரது 21 வயது மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அப்பாஸ் சினிமாவை எல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.

-விளம்பரம்-
Advertisement