முதன் முறையாக வெளியான நடிகர் அப்பாஸ்ஸின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படம்.!

By Rajkumar · 4/5/2019

தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு 'காதல் தேசம்'என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து.

சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.

இதையும் படியுங்க : அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேர்காணல் செய்யப்போகும் தமிழ் நடிகர்? யார் தெரியுமா.! 

அப்போது அவரது நண்பர்கள் மூலம் இயக்குனர் கதிருக்கு அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ்

இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full