அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேர்காணல் செய்யப்போகும் தமிழ் நடிகர்? யார் தெரியுமா.!

0
886
Trump
- Advertisement -

தமிழில் ஜிகர்தண்டா, ஜில் ஜங் ஜக் போன்ற பல படங்களில் நடித்தவர் சித்தார்த்தும் பாஜக கட்சியின் தீவிர எதிரியாகவே மாறி வருகிறார். அதற்கு முக்கிய காரணமே கடந்த சில காலமாக பல்வேறு அரசியல் கருத்துக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை வைத்து ஒரு நேர்காணல் ஒன்றை எடுத்தார். இது பல தரப்புகளில் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான அன்றே சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியை பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நேர்காணலிட்டதை கலாய்க்கும் விதமாகதான் சித்தார்த் இந்த பதிவை பதிவு செய்துள்ளார் என்று ட்விட்டரில் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement