பி.வி சிந்து திருமணத்தில் குடும்பத்துடன் அஜித் கலந்து கொண்டு இருந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும் உயர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் அஜித் அவர்கள் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார். பிரபலங்கள் திருமண விழாக்கள், பட விழாக்கள், தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் என எந்த ஒரு நிகழ்ச்சிலுமே அஜித் கலந்து கொள்வதில்லை. அப்படியே முக்கியமான பிரபலங்களின் விழாக்கள் என்றாலும் தன்னுடைய மனைவியை அஜித் அனுப்பி வைப்பார். இப்படி இருக்கும் நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்துவின் திருமணத்தில் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பி.வி சிந்து திருமணத்தில் அஜித்:
பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து தன்னுடைய பல ஆண்டு காதலன் வெங்கட தத்தா சாய் என்பவரை கடந்த டிசம்பர் 22 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வரவேற்பு விழா 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அஜித்குமார் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி, இவர்களுடைய இரண்டு பிள்ளைகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

திருமணத்தில் கலந்து கொள்ள காரணம்:
இது பலருக்கும் சந்தோசத்தை தந்தாலும் சிலர், பி.வி சிந்து திருமணத்தில் மட்டும் அஜித் கலந்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதாவது, ஷாலினி அவர்கள் நடிகை என்பதைத் தாண்டி பேட்மிட்டன் வீராங்கனை என்பது பலருக்குமே தெரியாத ஒன்று. அதன் மூலம் தான் பி.வி சிந்துக்கும் ஷாலினிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நட்பு ரீதியாக இருவருமே நல்ல தோழிகளாக மாறிவிட்டார்கள். அதனால் தான் குடும்பத்துடன் அஜித், பிவி சிந்துவின் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=Cwmc0onS5gY
நெட்டிசன்கள் ட்ரோல்:
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இன்னொரு தரப்பினர், அஜித் பட விழாக்களும், திரை பிரபலங்களின் இறுதி அஞ்சலி ஆகியவற்றில் கலந்து கொள்ளாததை விமர்சிக்கிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் இறந்தபோது கூட அவருடைய இறுதி அஞ்சலிக்கு அஜித் கலந்து கொள்ளவே இல்லை. இப்போது பிவி சிந்துவின் திருமணத்திற்கு மட்டும் அஜித் வந்ததற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அஜித் திரைப்பயணம்:
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.






