தமிழ் சினிமா உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பியவர் நடிகர் ஆனந்தராஜ். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். 1998 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலம் தான் ஆனந்தராஜ் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement

இவர் இதுவரை 130க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்த்ராஜ் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாகவே இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படம் பிகில். இந்த படத்தில் ஆனந்தராஜ் அவர்கள் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை பெற்றது.இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அந்த படத்துல இருந்து பாதியிலேயே ஓடி வந்திட்டேன். மேடையில் ஓப்பனாக பேசிய கௌதம் மேனன்.

Advertisement

இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் அவரின் சகோதரர் கனகசபைக்கு நேற்று பாண்டிச்சேரியில் காலை பதினோரு மணியளவில் தற்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், கனகசபையின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  கனகசபைக்கு ஆனந்த்ராஜை தவிர மற்றொரு இளைய சகோதரர் இருக்கிறார். அவர்களது பூர்வீக சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆனந்த்ராஜிடமும், மற்றொரு பங்கு இளைய சகோதரரிடம் இருந்துள்ளது.

Advertisement

இளைய சகோதரர், கனகசபையின் பங்கை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு சொத்து கிடைக்காததால் விரத்தியில் இருந்துள்ளார் கனகசபை. இந்த நிலையில் இவர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கனகசபை கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். ஆனந்த்ராஜ் சகோதரர் மறைவுக்கு சினிமாவுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement