அந்த படத்துல இருந்து பாதியிலேயே ஓடி வந்திட்டேன். மேடையில் ஓப்பனாக பேசிய கௌதம் மேனன்.

0
3356
gautham
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது இயக்குனர் கௌதம் மேனன் தான். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உண்டு. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் இயக்கத்தில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் அனுஷ்கா, மாதவனை வைத்து “நிசப்தம்” என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இவர் மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : விவாகரத்து கிடைத்த நாள் அன்று கூட கோர்ட்டுக்கு காலையில் – விவாகரத்து குறித்து டிடி.

இந்நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் கவுதம் மேனன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் கூறியது, இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அசுரன் மற்றும் ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது என்னால் பார்க்க முடிந்தது.

-விளம்பரம்-

அதே போல் எந்தவொரு திரைப்படத்திலும் அதன் கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்தால் மட்டுமே தான் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். அந்த விஷயத்தில் நான் உறுதியாக உள்ளேன். மேலும், இது பற்றி எல்லாம் சொல்லக் கூடாது. இருந்தாலும் இந்த சமயத்தில் சொல்கிறேன். ஒருமுறை நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால், அதன் கதை எனக்கு பிடிக்கவில்லை. படப்பிடிப்பும் சரியாக போகவில்லை. பின் அந்த படத்தில் இருந்து பாதியிலேயே நான் வெளியேறி விட்டேன் என வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். அது என்ன படமாக? இருக்கும் என்று சோசியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement