சினிமாவைப் பொருத்தவரை உச்ச நடிகர்கள் மட்டும் தான் தங்களது சொந்த குரலில் பேசுவார்கள் டப்பிங் பேசுவது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது இதனால் தான் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகளில் குரலுக்கு டப்பிங்கை பயன்படுத்துவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நாம் கேட்கும் பல்வேறு நடிகர்களில் குரலுக்கு சொந்தக்காரர் தான் இந்த வெளியே பட வில்லன் ஆன ரவிசங்கர் நடிகர் ரவிசங்கரை நடிகர் என்று சொல்வதைவிட டப்பிங் கலைஞர் என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கும் வேட்டைக்காரன் படத்தில் செல்லம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரவிசங்கர்.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால், இவர் பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் என்பது தான் பலரும் அறிந்திராத ஒரு விஷயம். தமிழ் தெலுங்கு மட்டுமல்ல இவர் ஹாலிவுட் படங்களுக்கு கூட டப்பிங் கொடுத்திருக்கிறார் 1995 ஆம் ஆண்டு வெளியான ஜுராஸிக் பார்க்கின் தமிழ் வெர்ஷனில் நடிகர் ரவிசங்கர் ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த Jeff Goldblum நடிகருக்கு டப்பிங் கொடுத்திருந்தார்.

Advertisement

மேலும் தமிழைப் போன்றே இவர் தெலுங்கிலும் பல்வேறு படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார. லுங்கில் ரகுவரன், பிரகாஷ்ராஜ், அர்ஜுன் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்ததும் நடிகர் ரவி ஷங்கர் தான். மேலும் ஹிந்தி நடிகரான சோனு சூத் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் கொடுப்பது ரவிஷங்கர் தான். நடிகர் ரவிசங்கரின் சிறப்பு நடிகர்களுக்கு ஏற்றாற்போல டப்பிங் கொடுப்பதுதான் உதாரணமாக பாபா படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி சாயாஜி ஷிண்டே இருவருக்கும் ரவிசங்கர் தான் டப்பிங் கொடுத்திருந்தார்.

அதேபோல தூள் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் மற்றும் அரசியல்வாதியாக வரும் ஷாயாஜி ஷிண்டே இருவருக்கும் டப்பிங் கொடுத்திருந்தார் . அதேபோல அழகிய தமிழ் மகன் படத்தில் கூட ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சாயாஜி ஷிண்டே இருவருக்கும் பல விஷயங்கள் தான் டப்பிங் கொடுத்திருந்தார். இப்படி ஒரு படங்களில் இரண்டு நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் நடிகர் ரவி சங்கர்

Advertisement
Advertisement