தமிழ் சினிமாவில் நடிகர்களாக நுழைந்து பின்னர் அரசியல் வாதிகளாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகரும் கன்னியாகுமரி தொகுதி எம் எல் ஏவுமான விஜய் வசந்தம் ஒருவர். இவருடைய அப்பா மிகப் பெரிய தொழிலதிபர். அது வேற யாரும் இல்லை. புகழ் பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் தான் நடிகர் விஜய் வசந்த். தற்போது நடிகர் விஜய் வசந்த் அவர்கள் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவரின் தந்தை வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

நடிகர் விஜய் வசந்த் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஆவார். அதனால் இவர் இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 படத்தில் நடிகர் விஜய் வசந்த் நடித்தார். இதன் பின் மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும் நடிகர் விஜய் வசந்த் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் நாடோடிகள்.

இதையும் பாருங்க : விரைவில் அம்மாவாக போகும் பரீனா – தற்காலிக வெண்பா இனி இந்த தொகுப்பாளினி தானாமே. யார் பாருங்க ?

Advertisement

தளபதி விஜய் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பல படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்து உள்ளார். பிறகு இவர் அச்சமின்றி, வேலைகாரன் போன்ற பல படங்களில் நடித்தார். பின் சமீப காலமாகவே இவர் சினிமா பக்கம் காணோம். இதனால் பல பேர் பல விமர்சனங்களை எழுப்பினார்கள். தற்போது இவர் “மை டியர் லீசா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமாரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏவாகவும் பொறுப்பேற்றார். நடிகர் விஜய் வசந்த் கடந்த 2010 ஆம் ஆண்டு நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement