விரைவில் அம்மாவாக போகும் பரீனா – தற்காலிக வெண்பா இனி இந்த தொகுப்பாளினி தானாமே. யார் பாருங்க ?

0
4920
barathi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இன்று இந்த விறுவிறுப்புடனும் பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல் ஆகவே மாறியுள்ளது. விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் பாரதிகண்ணம்மா ஒன்றாக உள்ளது. பாரதி கண்ணம்மாவை ஏற்பாரா? பாரதி எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பான்? வெண்பாவின் சதி செயல் பாரதிக்கு தெரியவருமா? என்று பல ஆர்வத்துடன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து வெண்பா கதாபாத்திரத்திற்கு பதில் வேறு நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் கதாநாயகிக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக வெண்பாவின் கதாபாத்திரத்தில் பரினா என்பவர் நடித்து வருகிறார். இவருடைய வில்லித்தனத்தினால் சீரியல் கதைகளுமே அதிருகிறது. பரினா முதன்முதலில் தொகுப்பாளினியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

இதையும் பாருங்க : சிவாஜி பட வில்லனின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா ? அட, இவர் தான் இவர் மனைவியா.

- Advertisement -

அதற்கு பிறகு தான் இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் வெண்பா பல மக்களிடம் திட்டு வாங்கினாலும் மக்களுக்கு பிடித்த வில்லியாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு பரினா உள்ளார். இந்த தொடர் இவ்வளவு பெரிய உச்சத்தில் இருப்பதற்கு இவருடைய பங்கும் உண்டு என்று சொல்லலாம். சொல்லப்போனால் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரம் இல்லை என்றாலே சீரியல் இல்லை. அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் தான் சீரியல் ட்ராக்கை மாற்றியது. தற்போது பரினா நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். மேலும், இவர் தன்னுடைய பிரசவத்திற்கு தயார் ஆகி இருப்பதால் பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

பரினா நிறைமாதமாக இருக்கும் போதே அவர் தன்னால் முடிந்தவரை காட்சிகளில் நடித்து தந்துள்ளார். அதோடு முதன்முதலாக ஒரு நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் சீரியலில் இந்த அளவிற்கு நடித்திருப்பது ஒரு சவாலான விஷயம். இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்திற்கு பதிலாக வி ஜே மணிமேகலை அல்லது பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் நடிப்பதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வருகின்றன. ஆனால், இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. பிக் பாஸ் வீட்டில் அனிதாவை அழுமூஞ்சி ஆக பார்த்து விட்டு தற்போது வெண்பாவாக இவரை பார்க்க மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய மணிமேகலை இந்த வெண்பா கதாபாத்திரத்திற்கு சுத்தமாகவே செட்டாகாது. இவர்கள் ரெண்டு பேரும் வெண்பா கதாபாத்திரத்திற்கு ஒத்திபோக மாட்டார்கள் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் வெண்பா ரோலில் எந்த நடிகையும் தேர்வாகாத நிலையில் பரினாவே தொடர்ந்து நடிப்பாரா? என்று மக்களும் எதிர்பார்க்கின்றனர். உண்மையை சொல்லப்போனால் பரினாவின் வில்லித்தனமான நடிப்பை யாரும் மிஞ்சவே முடியாது. அவருக்கு பதில் வேறு யார் வந்து நடித்தாலும் அவருடைய நடிப்பிற்கு ஈடாகாது என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement