விருது வழங்கும் விழாவில் அஜித் செய்த செயல் – மணமுறுகிய பக்ரு !

0
1995

நடிகர் அஜித் பற்றியும் அவரது குணத்தை பற்றியும் பல நடிகர் நடிகைகள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம் அவர் எப்படி பட்ட குணம் கொண்டவர் என்று.

Pakru family

தமிழில் ஜீவாவின் டிஷும் , மற்றும் விஜயின் காவலன் படத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார் சினிமாவிற்காக தனது பெயரை பக்ரு என்று மாற்றிக்கொண்டார்.மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள பக்ரு தற்போது மலையாள தொலைக்காட்சி ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் அஜித் பற்றி கூறிய பக்ரூ ‘அஜித் மிகவும் நல்ல மனிதர் ஒரு சமயம் நான் ஒரு விருது விழாவிற்கு சென்றிருந்தேன்,அந்த விழாவில் அஜித்தை சந்தித்தேன் அப்போது அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினேன். ஆனால் அஜித் அவர்கள் கீழே இறங்கி வந்து என்னுடன் பிகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் எனது குடும்பத்தை பற்றியெல்லாம் நலம் விசாரித்தார்’என்று கூறியுள்ளார்