நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார். சமீபத்தில் காமெடி நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் கோமகன் ஆகியோர் கூட கொரோனாவால் காலமாகி இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரான அருண் பாண்டியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் நெஞ்சு வலி ஏற்பட்டும் உயிர் போய் உயிர் பிழைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவரது மகள் கீர்த்தி பாண்டியன், அவருக்கு கடந்த சில காலமாகவே நெஞ்சுவலி இருந்ததாகவும் கூடவே அவருக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் குரானாவின் தாக்கம் கொஞ்சம் குறைந்தாலும் அவரது இதயத்தில் 90 சதவீதத்தில் இரண்டு அடைப்புகள் இருந்ததாகவும் அவரை சரியான நேரத்தில் தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளீர்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சரி செய்துள்ளனர் இரண்டரை மணி நேரம் நடந்து முடிந்த அந்த அறுவை சிகிச்சையில் 24 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார் அருண்பாண்டியன். மேலும், இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

Advertisement
Advertisement