அம்மா போல மகன், அப்பா போல மகள் – அருண் விஜய் குடும்பத்தின் அழகிய தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்.

0
729
arun
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். 

-விளம்பரம்-
Image

நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். 

- Advertisement -

அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் 9 வயதாகும் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார்.

Image

இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அதுவும் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை கூட நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக அருண் விஜய் தன் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அப்பாவிற்கு மேட்சிங் உடையில் மகனும் தந்தைக்கு மேட்சிங் உடையில் மகளும் படு குயூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement