திரிஷா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யா.! காமெடி நடிகர் செய்ததை பாருங்க.!

0
647
Arya

தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல புதுமுகங்களின் வரவால் கடந்த சில வருடங்களாக அவருடைய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தார்.

தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயமும் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டது.முன்னணி நடிகையாக இருந்த போது த்ரிஷாவுக்கும் ஆர்யாவிற்கும் காதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கபட்டது.

இதையும் படியுங்க : முதன் முறையாக தனது கணவர் மற்றும் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஷாஜஹான் பட நடிகை.! 

- Advertisement -

இந்த நிலையில் த்ரிஷா நேற்று (மே 4) தனது 36 -வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் நடித்த 60 -வது திரைப்படமான ‘பரமபத விளையாட்டு’ படத்தின் டிரெய்லர் குறித்து விளக்கம் அளித்தார்.

திரிஷாவிற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிலையில் ஆர்யாவும் தனது பங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இதற்கு ரீ-ட்வீட் செய்த காமெடி நடிகர் சதீஷ்’திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை சொல்ல மாட்டாரு போல’ என்று ட்வீட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

பலரும் அது என்ன வார்த்தை என்று கேட்க, த்ரிஷவை ஆர்யா செல்லமாக குஞ்சிமணி என்று சிலர் ட்வீட் செய்தனர். திருமணம் முடிந்து விட்டதால் பிரச்சனை வருமோ என்று ஆர்யா அப்படி கூப்பிடவில்லை.

Advertisement