துபாய் லாட்டரியில் ஜாக்பாட் அடித்த ஆர்யாவின் தங்கை – எத்தனை கோடி தெரியுமா ? வீடியோ இதோ.

0
1637
arya
- Advertisement -

நடிகர் ஆர்யாவின் தங்கை லாட்டரி டிக்கெட் மூலம் பல கோடி ரூபாய் பரிசை வென்று உள்ள செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ஆர்யா பிரபல நடிகையான சயீஷா திருமணம் செய்து கொண்டார் என்பது பலரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

மேலும், நடிகர் ஆர்யாவிற்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருடைய பெயர் பெயர் சத்யா, இவரும் ஆர்யாவை போல சினிமவிற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய உண்மையான பெயர் ஷஹீர். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘அமரகாவியம்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

நடிகர் ஆர்யாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவருடைய முழு பெயர் தஸ்லீனா அஹ்மத் புதியபுரயில். இவர் கடாபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தஸ்லீனாவின் கணவர் இந்தியா மற்றும் கத்தார் நாட்டில் இயங்கி வரும் MRA ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது  தஸ்லீனா ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

மேலும், இந்த தம்பதியருக்கு 21 வயது மகனும் 15 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. அங்கு விற்கப்படும் டுட்டி ஃபிரீ லாட்டரிகளுக்கு பல கோடிக்கணக்கில் பரிசுகள் விழுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் தஸ்லீனா கடந்த ஜனவரி 26ம் தேதி இவர் ஆன்லைன் மூலம் பிக் டிக்கெட் லாட்டரி வாங்கினார். இவர் வாங்கிய டிக்கெட்டுக்கு தற்போது முதல் பரிசான ₹ 30 கோடி கிடைத்துள்ளது. மேலும், இரண்டாம் பரிசாக 35 லட்சத்தை துபாயில் வேலை தேடி வரும், கேரளாவை சேர்ந்த இளைஞர் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement