விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற படங்களிலும் இவர் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். இப்படி 12 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார்.
அஸ்வின் குறித்த தகவல்:
இதனை தொடர்ந்து இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த செம்மி படம் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதை அடுத்து இவர் நொடிக்கு நொடி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது அஸ்வின் நடித்திருக்கும் படம் ஹாட்ஸ்பாட் 2. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கி இருக்கிறார். இந்த படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு வந்தது.

செய்தியாளர் கேள்வி:
தற்போது இரண்டாம் பாகம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, பவானி ஸ்ரீ உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் செய்தியாளர், நீங்கள் இப்போதும் கதை கேட்கும் போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா? விழித்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட அஸ்வின், ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாக கேட்டால் நீங்கள் பதில் சொல்வீர்களா? அப்போ 40 கதைகள் என்பது நான் பொதுவாக சொன்ன ஒரு நம்பர்.
https://www.youtube.com/watch?app=desktop&v=395GuTAWg1U
அஸ்வின் சொன்னது:
அதுக்கு அதிகமாகவும் நான் கதை கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகளை கேட்டாலும் நீங்கள் தூங்காமல் இருப்பீர்களா? தியேட்டரில் நான் பார்க்கும்போது பலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போ நான் யாரையும் புண்படுத்தனும்னு பேசவே இல்லை. அப்பாவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்ப படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்தி குத்தி பார்க்கிறீர்கள். நான் ஒரு சிறந்த நடிகர் என்று சொல்ல மாட்டேன். நான் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குனர்களிடமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்ணுகிறேன் என்று பேசியிருக்கிறார்.






