பள்ளியில் அஜித் என்ற பையனால் என் தங்கச்சி மிகவும் சிரமப்பட்டாள். பிரபல நடிகர் பேட்டி.

0
13775
ajith-babloo

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவள் வருவாளா. இந்த படத்தில் அஜித் குமார், சிம்ரன், பிரிதிவீராஜ், சுஜாதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு வில்ளனாக பிரிதிவீராஜ் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவள் வருவாளா படத்தில் பிருத்திவிராஜ் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவங்கள் குறித்து கூறியது, அஜித் ஒரு நேர்மையான, ஜென்டில்மேன். திரையுலகில் இருந்தாலும், வெளியுலகம் ஆக இருந்தாலும் அஜித் தங்கமான மனிதன்.

- Advertisement -

அவரை தல, சூப்பர் ஸ்டார், அவர் தான் எல்லாமே என்று சொல்லுமளவிற்கு தகுதியானவர். என்னுடைய கடைசி தங்கை உடன் கூட படித்தவர் அஜித். எனக்கு மொத்தம் மூன்று தங்கைகள் இருக்கிறார்கள். வகுப்பில் என் தங்கை இடம் அஜித் என்ற பையன் சண்டை வாங்குகிறான் என்று நிறைய பேர் சொல்லுவார்கள். என் தங்கைக்கு சுருட்டை முடி. அவள் தலையில் தினமும் சுவிங்கம் சாப்பிட்டு அஜித் என்ற பையன் போட்டு விடுவான். பின்னர் என் அம்மா தலை சீவும் போது பார்த்தால் தலையில் ஒரே சுவிங்கம். இதை கண்டு நாங்கள் அதிர்ந்து போனோம்.

பின் என் தங்கை ஷூ லேசர் மாற்றி கட்டிவிடுவது, புத்தகங்களை கிழிப்பது போன்ற பல செயல்களை செய்து வந்து உள்ளார். அப்பதான் ஒரு நாள் நான் அஜித் பார்க்கும்போது இவர் தான் என் தங்கச்சியை கிண்டல் செய்ததா என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், ஒருநாள் இதெல்லாம் அவர் இல்லை என்று எனக்கு தெரிந்தது. சமீபத்தில் நடிகர் சங்கத்தின் போது நானும் அஜித், நாசர் எல்லாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அஜித் இவர்கள் தங்கை என்னோட கிளாஸ் மேட் தான் என்று சொன்னார். அப்ப நான் இவர் தான் என் தங்கை இடம் நிறைய சண்டை போட்டு வம்புக்கு இழுப்பார் என்று சொன்னேன்.

-விளம்பரம்-

உடனே அஜித் அது நான் இல்லைங்கே. உங்கள் தங்கையிடம் சண்டை வாங்குவது எல்லாம் அஜித் மேனன் தான். நான் அஜித் குமார். நான் தான் உங்கள் தங்கையை காப்பாற்றுவேன் என்று சொன்னார். அப்போது தான் எனக்கு தெரிந்தது என் தங்கை உடன் இரண்டு அஜித் படித்து உள்ளார்கள். என் தங்கச்சி கிட்ட அஜித் போன் நம்பர் கொடுத்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா என்னைக் கூப்பிடுங்கள் என்று சொல்லி இன்னும் அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்று கூறினார்.

Advertisement