8 வயது மகன் இருக்கையில் இரண்டாம் திருமணம், தற்போது இரண்டாம் மனைவியையும் விவகாரத்து செய்கிறாரா சிறுத்தை சிவா தம்பி ?

0
485
bala
- Advertisement -

நடிகர் பாலா தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் பிரிந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு பாலா அவர்கள் ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன். இந்த படத்திற்கு பிறகு பாலா சில படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.

- Advertisement -

பாலா முதல் திருமணம்:

பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவருடைய தந்தை வீட்டிற்கு சென்று விடுவாராம்.

பாலா விவாகரத்து:

இதனால் சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. பின் நடிகர் பாலா அவர்கள் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது குறித்து பாலா முதலில் தெரிவிக்காமல் இருந்தார்.

-விளம்பரம்-

பாலா இரண்டாம் திருமணம்:

பின் பாலா தன் இரண்டாம் மனைவி உடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உறுதி செய்து இருந்தார். மேலும், இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது பாலா தன்னுடைய இரண்டாம் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாடு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்து பாலாவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை நீக்கி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தது, என்னுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.

பாலா வெளியிட்ட வீடியோ:

ஆனால், நான் அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. அதே சமயம் இரண்டாம் திருமணமும் தோல்வி என்பதால் அதைப் பற்றி தான் நினைக்கிறேன். பலர் நான் எலிசபத்துடன் பேசக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இங்கே உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவள் என்னை விட சிறந்த நபர். அவள் ஒரு மருத்துவர். அவள் மன அமைதிக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள். அவள் ஒரு பெண். நான் எல்லாவற்றையும் மாற்றுவேன். எனது வாழ்க்கையில் இது வலி மிகுந்த நாட்கள். நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தகுதி வாய்ந்த நபர் தான். ஆனால், இப்போது அதை நான் செய்யப் போவதில்லை. தயவு செய்து யாரும் என்னை தூண்டி விட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement