நடிகர் பரத் மனைவி யார் , என்ன செய்கிறார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
26084
Actor-bharath-wife
- Advertisement -

நடிகர் பரத் 1984ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பரத்திற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ப்ரீத்தி. தமிழில் பாய்ஸ் என்ற சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் நடித்தார். அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

actor-bharath

- Advertisement -

சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற ஒரு பல் மருத்துவர் ஆவார். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர பல் மருத்துவ கல்லூரியில் படிக்க வந்த ஜெஸ்லியை பரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் அவரது நண்பர்.

-விளம்பரம்-

Jeshly

jeshly-Joshua

bharath-wife

பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் .ஆனால் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் . திருமணத்திற்கு பின்பும் கூட நான் படிப்பேன் என ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டார் ஜெஸ்லி.

பரத் தற்போது சிம்பா, காளிதாஸ் மற்றும் போட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தற்போது குழந்தை வேண்டாம் என இருக்கின்றனர்.

Advertisement