ரஜினியின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் பிஜிலி ரமேஷ். இவர் யூடியூப் சேனலில் வந்த பிராங்க் வீடியோக்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் ரஜினிகாந்த் உடைய தீவிர ரசிகர்.

யூடியூப் மூலம் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு பெயரை வாங்கி தந்தது. அதனை அடுத்து இவர் நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை ,ஜாம்பி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
பிஜிலி ரமேஷ் குறித்த தகவல்:
மேலும், இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்து இருந்தார். இப்படி சினிமாவில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சமீபத்தில் நடிகர் பிஜிலி ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

பிஜிலி ரமேஷ் இறப்பு:
இருந்தும் சிகிச்சை பலனில்லாமல் இன்று இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தற்போது இவருக்கு 45 வயது தான். இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இன்று மாலை 5:00 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
View this post on Instagram
பிஜிலி ரமேஷ் மனைவி பேட்டி:
மேலும், பிஜிலி ரமேஷ் இறப்பு அவருடைய குடும்பத்தை ரொம்பவே பாதித்து இருக்கிறது. இவருடைய மனைவி ரொம்பவே மனம் உடைந்து கதறி அழுதிருக்கிறார். பின் செய்தியாளர்களை சந்தித்த பிஜிலி ரமேஷ் மனைவி, என்னுடைய கணவர் தீவிர ரஜினி ரசிகர். அவருக்கு கூலி படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
View this post on Instagram
பிஜிலி ரமேஷ் கடைசி ஆசை:
அந்த அளவிற்கு அவருக்கு ரஜினி சார் என்றால் ரொம்ப பிடிக்கும். தூங்கும் போது கூட தன்னுடைய தலைக்கு மேல் அவருடைய புகைப்படத்தை வைத்திருப்பார். எப்படியாவது ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் முடியாமலே போனது என்று வருத்தத்துடன் பேசியிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மும்முரமாக உருவாகி வரும் படம் தான் கூலி.






