தென்னிந்திய சினிமாவின் பணக்கார காமெடி நடிகர் – அவருக்குள் இப்படி ஒரு அபார திறமையா?

0
523
- Advertisement -

இந்திய சினிமாவிலேயே பணக்கார நகைச்சுவை நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் நடிகர்களை விட நகைச்சுவை நடிகர்கள் பெரிதாக சம்பளம் வாங்க மாட்டார்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இந்தியாவில் பணக்கார நகைச்சுவை நடிகர் என்றால் கபில் ஷர்மா, பார்தி சிங் என்று தான் பலரும் சொல்வார்கள்.

-விளம்பரம்-

ஆனால், உண்மையில் இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம். இவரை தெரியவாதவர்கள் யாராவது இருப்பார்களா ? நடிகர் பிரம்மானந்தம் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் படத்தில் தான். விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கில்லி படத்தில் தான் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

இந்த படத்தில் விஜய் வீட்டில் பூஜை செய்யும் ஐயராக இவர் நடித்திருந்தார். ஒரு காட்சியில் வந்தாலும் இவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. கில்லி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நியூ, மொழி, சரோஜா, வானம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி படத்திலும் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சணத்தை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பிரம்மானந்தம் சொத்து மதிப்பு:

இந்நிலையில் பிரம்மானந்தம் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரம்மானந்தம் அவர்கள் மாதத்திற்கு இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.இவருடைய மொத்த சொத்து மதிப்பு 490 கோடி இருக்கும். தற்போது இவருக்கு 67 வயது ஆனாலும் இன்றும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும், வாழும் நடிகருக்கு அதிக திரைப்பட வரவுகளை வழங்கியவர் என்ற கின்னஸ் உலக சாதனையும் படைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிரம்மானந்தம் சொத்து விவரம்:

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சினிமாக்கலைக்காக இவர் பங்களிப்பாட்டியதற்காக பல விருதுகளை பெற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிரம்மானந்தம் அவர்கள் ஒரு கருப்பு பிரீமியம் Mercedes-Benz, Audi R8 மற்றும் Audi Q7 ஆகியவற்றை வைத்திருக்கார். மேலும், இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள விலைமதிப்பற்ற விவசாய நிலங்களை வைத்திருக்கிறார். பின் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான ஜூப்ளி ஹில்சில் ஒரு பங்களாவை வைத்திருக்கிறார்.

Advertisement