தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் ஒருவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் சின்னிஜெயந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருந்த அவர், நாளுக்குரிய தெய்வத்தை சென்று வழிபடுவது தான் என்னுடைய வழக்கம். திங்கள்கிழமை மயிலாப்பூர் தண்ணீர்த்துறை மார்க்கெட் அருகில் இருக்கும் அப்பர் சுவாமி கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவேன். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு விசேஷமான நாள் என்பதால் முருகனை வழிபடுவேன். புதன்கிழமை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையிலிருக்கும் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருவேன். வியாழக்கிழமை மயிலாப்பூர் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு செல்வேன்.

இதையும் பாருங்க : இளம் வயதில் மனிஷா கொய்ராலா எடுத்த முதல் போட்டோ ஷூட் – எப்படி இருந்துள்ளார் பாருங்க.

Advertisement

அப்படியே 10 நிமிடங்கள் அங்கு தியானம் செய்வேன். அங்கிருந்து எழும்பூர் தர்காவுக்குப் போய் விட்டு மவுன்ட்ரோடு தர்காவுக்கு வருவேன். மாலையில் வீட்டுக்கு அருகில் இருக்கும் அப்பர் சுவாமி கோயில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவேன். வெள்ளிக்கிழமை கோமாதாவை தான் நான் வணங்குவேன். வாழைப்பழம் வாங்கிக்கொண்டு வரும் வழியில் எங்கு மாடுகளைப் பார்த்தாலும் வாழைப்பழம் கொடுப்பேன். சனிக்கிழமை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்வேன். மாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வேன்.

ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்வேன். நான் மூன்று மதங்களை சேர்ந்த கடவுளையும் கும்பிடுவேன். அதற்கு காரணம் நான் மூன்று விதமான பள்ளி, கல்லூரிகளில் படித்தது தான். ஐந்தாம் வகுப்பு வரை ராமகிருஷ்ணா வித்யாலயாவிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வெஸ்லி ஹை ஸ்கூல் எனும் கிறிஸ்டியன் ஸ்கூலில் படித்தேன். பி.யூ.சியிலிருந்து பி.காம் வரை நியூ காலேஜ் எனும் இஸ்லாமியக் கல்லூரியில் படித்தேன். அதனால் தான் நான் சிறு வயதிலிருந்தே எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement