பிரபல நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் சந்தோஷத்தில் போட்டிருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா, கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சிபிராஜும் ஒருவர். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சத்யராஜ்.

இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், சத்யராஜின் மகன் தான் சிபிராஜ். இவர் 'ஸ்டூடன்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதற்குப் பின் ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர், கபடதாரி, ரங்கா, மாயோன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார்.
சிபிராஜ் குறித்து :
தற்போது 'மாயோன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே நடிகர் சிபிராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் சிபிராஜின் மூத்த மகன் தீரன் பள்ளி படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதோடு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கி வருகிறாராம். தற்போது சிபிராஜின் மகன் தீரன் இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாராம்.
View this post on Instagram
சிபிராஜ் பதிவு :
இது குறித்து நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் , கொல்கத்தாவில் நடைபெற்ற 8 ஆவது இந்திய TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில் எனது மகன் தீரன் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என் மகனை உடல் அளவிலும் மனதளவிலும் தயார்படுத்திய அவரது பயிற்சியாளர் திரு கார்த்திகேயன் சுதா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சினிமா வாரிசுகள் :
சினிமா நடிகர்களின் வாரிசுகள் ஒரு பக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குனராகவும், ஹீரோயின்களாகவும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சினிமாவே வேண்டாம் என மற்ற துறையில் அவர்கள் சாதனை படைத்து வருவது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் தங்க மெடல் வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே.

சூர்யா மகன் மற்றும் மகள் செய்த சாதனை :
மேலும், கடந்த 2024ல் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியபோது, சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகனைக் கொண்டாடிய வீடியோக்கள் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி இருந்தது. மறுபக்கம் சூர்யாவின் மகள் தியாவும் ஆவணப்படம் எல்லாம் இயக்கி பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். அதை நடிகை ஜோதிகா பெருமையோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






