Latest News : பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துமனையில் அனுமதி.

0
1578
daniel
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்று காரணமாக பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : புதிய காதலியுடன் வெறுப்பேற்றிய முன்னாள் காதலர் – புதிய காதலருடன் ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட புகைப்படங்கள்.

- Advertisement -

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.மேலும், நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் வெப்ஸ் சீரியசிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதே போல கடந்த சில நாட்களுக்கு பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானார். அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் கில்லி பட நடிகர் மாறனும் மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Advertisement