தன் மகனை வைத்து தயாரித்த ஒரே படத்தால் டெல்லி கணேசனின் வாழ்க்கை மாறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் டெல்லி கணேஷ். இவர் திருநெல்வேலி சேர்ந்தவர். இவர் பழம்பெரும் நடிகர் ஆவார். இவர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து இருந்தார். டெல்லியில் இவர் வசித்திருந்தார். அப்போது அவருக்கு பாரத நாடக சபாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் சென்னை வந்தார். அதற்கு பிறகு தான் பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் 1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் குணச்சித்திர வேடங்களில் தான் படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

டெல்லி கணேஷ் திரைப்பயணம்:

மேலும், இவர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், சிம்பு, விஜய், பிரபு, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக டெல்லி கணேஷ் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அதற்குப்பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சின்னத்திரையில் டெல்லி கணேஷ்:

மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் குறும்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கருமேகங்கள் கலைகின்றது.

Advertisement

டெல்லி கணேஷ் மகன் நடித்த படம்:

இதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டெல்லி கணேஷ் மகன் மகா. இவரை வைத்து ஒரு திரைப்படத்தை டெல்லி கணேஷ் தயாரித்திருந்தார். அந்த படத்தின் பெயர் என்னுள் ஆயிரம். இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. அது மட்டும் இல்லாமல் சென்னையில் ஒரு சில திரையரங்கில் மட்டுமே ஒரே ஒரு காட்சி மட்டும் தான் இந்த படம் திரையிடப்பட்டது.

Advertisement

மனம் உடைந்த டெல்லி கணேஷ்:

அதுவும் ஒரு சில நாட்களில் இந்த படத்தை தூக்கி விட்டார்கள். சென்னையின் புறநகர் பகுதியில் எந்த தியேட்டரிலும் இந்த படம் வெளியாகவில்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சில திரையரங்களில் மட்டுமே இந்த படம் வெளியாகி இருந்தது. இதனால் இந்த படம் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. இது டெல்லி கணேசுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் டெல்லி கணேஷ் இதுவரை தான் நடித்த படங்களின் மூலம் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து இந்த படத்தை எடுத்தார். இந்த ஒரே படத்தால் இவருடைய மொத்த வாழ்க்கையுமே மாறிவிட்டது.

Advertisement