‘முதல் காட்சியிலிருந்து கடைசி வரை, நான்’ – விடுதலை 2 படத்தை பாராட்டி பதிவிட்டுள்ள தனுஷ்

0
306
- Advertisement -

‘விடுதலை 2’ படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் போட்டிருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியானது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன்,கென் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருந்தார். தற்போது இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்கிருக்கிறார்.

- Advertisement -

விடுதலை 2 படம்:

கடந்த 20 ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் வருகிறது. தற்போது வரை 25 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் இடதுசாரி அரசியல் குறித்து ஆழமாக பேசப்பட்டிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். விடுதலை 2 திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பி இருக்கும் சூழலில் பல அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

தனுஷ் பாராட்டு:

இந்நிலையில் நடிகர் தனுஷ் விடுதலை 2 படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், விடுதலை 2 அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒரு திரைப்படம் ஆகும். படத்தின் முதல் காட்சியில் இருந்து படம் முடியும் வரை படத்தோடு ஒன்றியிருந்தேன். தலைசிறந்த படைப்பாளர் வெற்றிமாறனின் மிகச்சிறந்த படைப்பு. இளையராஜா சாரின் இசையை ரசித்தேன். மேலும், அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி :

மேலும், ஆர் வேல்ராஜன் ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. இந்த படத்தை மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் தயாரிப்பதற்காகப் எலரெட் குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு என் அன்பைப் பகிர்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்பினேஷன் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர்கள் அனைவரும் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை போன்ற மிகச் சிறந்த ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

வட சென்னை 2:

குறிப்பாக, இவர்கள் கூட்டணியில் கடைசியாக வந்த ‘வட சென்னை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் , ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி, கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வட சென்னை மக்களின் 35 வருட வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. வெகு நாட்களாகவே வெற்றிமாறனை எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் ‘வட சென்னை 2 திரைப்படம் எப்போ’ என்பது போல் ரசிகர்கள் ஆர்வமாக கேள்வியை எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement