நம்ப முடியாதபடி ஆளே மாறிய பிரபல நடிகர். ஜோடியாக பிரபல நடிகை. ஷாக்காக்கிய புகைப்படம்.

0
18498
dileepkumar
- Advertisement -

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் திலீப். இவருடைய இயற்பெயர் கோபால கிருஷ்ணன். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த என்னோடிஷ்டம் கூடாமோ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், மிமிக்கிரி செய்பவர் என பல திறமைகளைக் கொண்டு கலக்கி வருகிறார். இவருடைய ப்ளஸ்ஸே தன்னுடைய நடிப்பில் நகைச்சுவையை கலப்பது தான். கடந்த ஆண்டு நடிகர் திலீப் அவர்கள் நடிகை பாவனாவை கூலிப் படையை விட்டு ஏவிய புகாரில் கைது ஆனார். பின் இதற்காக இவர் 85 நாட்கள் சிறையில் இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் நடிகர் திலீப் ஜாமீனில் இருந்து வெளியே வந்து இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இவர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வெளியான படம் ராம லீலா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் இவருக்கு மன உளைச்சல்களும், சோசியல் மீடியாவில் ஏற்படும் சர்ச்சைகளும் அதிகமாக இருந்தது. பின் நடிகர் திலீப் அவர்கள் கம்மார சம்பவம், கோடதி சமாக்‌ஷம் பாலன் வக்கீல் போன்ற பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் கிறிஸ்துவர்,என் மனைவி இந்து. ஆனால், எங்கள் திருமணம் இந்த முறைப்படி தான் நடந்தது

இந்நிலையில் தற்போது இவர் கேசு ஈ வீடின்ட நாதன் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் திலீப் அவர்கள் 60 வயது முதியவராகவும், அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி நடிக்கிறார். நடிகை ஊர்வசி கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் தான்.

-விளம்பரம்-
 kesu ee veedinte nathan

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு வருகிறார். மேலும், நடிகை ஊர்வசி படங்கள் எல்லாமே நகைச்சுவையில் தூள் கிளப்பும். தற்போது இவர்கள் இருவரின் காமெடியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Advertisement