தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இதற்கு பிறகு இவர் சினிமா உலகில் ‘மன்மதன்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மேலும், அவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் வேற லெவல். காமெடியனாக திரையுலகில் கால் பதித்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

Advertisement

சினிமாவில் தனக்கென்று ஒரு காலம் வந்து விட்டால் அனைவரும் பட்டையை கிளப்புவார்கள். அப்படி தான் சினிமா உலகில் தனக்கென பாதையை அமைத்துக் கொண்டவர் நடிகர் சந்தானம். காமெடியனாக பெரிய அளவில் புகழ் பெற்ற இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது 2002 ஆம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் காதல் அழிவதில்லை, அலை என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க :சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகரின் திடீர் திருமணம். வைரலாகும் புகைப்படம்.

Advertisement

சந்தானத்திற்கு ஆரம்ப காலத்தில் அதிக வாய்ப்பு கொடுத்தது சிம்பு தான். சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தின் மூலம் சந்தானம் மிகவும் பிரபலமாடைந்தார். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரும் லொள்ளு சபா நடிகருமான ஸ்வாமிநாதன் சந்தானம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், சந்தானத்திற்கு ஆரம்பத்திலேயே ஹீரோவாக ஆக வேணும் என்று என்ன இருந்தது இல்லை. அவருக்கு சிம்பு மிகவும் நெருக்கம்.

Advertisement

வீடியோவில் 13 : 25 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

சிம்பு, சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்த போது கௌண்டமணி சிம்புவிடம் ‘அவன் சினிமாவை எல்லாம் கலாய்ச்சிட்டு இருக்கான், அவனுக்கு போய் சான்ஸ் கொடுக்கற’ என்று கேட்டார் என்றும் இதனால் கௌண்டமணி சீனை குறைத்துவிட்டு அவனுடய சீனை ஏத்தியதாக நான் கேள்விபட்டேன். ஆனால், அதற்கு முன்பாகவே சிம்புவின் இரண்டு மூன்று படத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார் சுவாமிநாதன்.

Advertisement