சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகரின் திடீர் திருமணம். வைரலாகும் புகைப்படம்.

0
38454
vinoth-babu

சில வருடங்களாகவே தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு சமமாக சின்னத்திரை நடிகர்களையும் மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்த புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்புகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

vinoth Babu

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி உள்ளது. இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்குகிறார். இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடிக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தமிழரசி. தன்னுடைய தாய், இரண்டு சகோதரிகள், தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த வேல்முருகன் சிறுவயதிலிருந்து பெற்றோரை இழந்து அவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார். பின் இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே ஒருவர் ஒருவரை காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர பழைய பகை மீண்டும் உருவெடுக்கிறது. பின் கால மாற்றத்தில் அது மாறியதா? இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் கதையின் சுவாரசியமே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வினோத் பாபு அவர்களுக்கு திடீரென்று தற்போது திருமணம் நடந்து உள்ளது.

மேலும், வயலூர் கோவிலில் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், இவருடைய மனைவி விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஏன் இந்த திடீர் திருமணம் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் நடிகர் வினோத் பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement