மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் ஜெயராமின் மகள் – எப்படி இருந்த மகள் எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
419
jayaram
- Advertisement -

மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே மூன்று சினிமாவில் நடிக்கும் போது தற்போது நான்காவது நபர் சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் இருந்து நடிகைகள் தான் தமிழில் அதிகம் நடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். உண்மையிலேயே, மலையாள மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அதிகம் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம். 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் பேசும் கலைஞரும் ஆவார். மேலும், நடிகர் ஜெயராம் அவர்கள் மலையாளத்தில் மிகப் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவருடைய காமெடி கலந்த நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தது. தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் :

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்.

ஜெயராம் நடிக்கும் படம்:

இதனை தொடர்ந்து ஜெயராம் சம்ஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
‘நமோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஜீஷ் மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் ஜெயராம் அவர்கள் குசேலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் ஜெயராம் அவர்கள் தன்னுடைய உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார். மேலும், மொட்டை அடித்து வித்தியாசமான கெட்-அப்பில் ஜெயராம் நடித்து வருகிறார். கிருஷ்ணனுக்கும், குசேலனுக்கும் இடையில் உள்ள நட்பு பற்றி பேசும் படம் தான் ‘நமோ’.

-விளம்பரம்-

ஜெயராம் குடும்பம்:

இந்த நிலையில் ஜெயராமின் குடும்பத்திலிருந்து நான்காவது நபர் சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜெயராமின் மனைவி பார்வதி. இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். பூவுக்குள் பூகம்பம் உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகர் ஜெயராம்- பார்வதி தம்பதியருக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் மகன் காளிதாஸ் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

6

சினிமாவில் களமிறங்கும் ஜெயராம் மகள் :

அதுமட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயராம் மகள் சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெயராம் மகள் மாளவிகா சமீபத்தில் ’மாயம் செய்தாயோ பூவே’ என்ற இசை ஆல்பத்தில் அசோக் செல்வன் உடன் நடித்து இருந்தார். தற்போது இவர் சினிமாவில் அறிமுகமாக கதை கேட்க தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து மாளவிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement