ஆர்யா குடிக்க மாட்டான், ஆனா பொண்ணுங்க விசயத்துல – வைரலாகும் ஜீவாவின் வீடியோ.

0
23931
arya
- Advertisement -

ஆர்யாவை பற்றி சமீபத்தில் ஜீவா பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆர்யா மற்றும் ஜீவா மிகவும் நல்ல நண்பர்கள். ஆர்யா நடித்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கூட ஜீவா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜீவாவிடம், சிங்கம் புலி வக்கீலாக (சிங்கம் புலி படத்தில் ஜீவா வக்கீலாக நடித்து இருப்பார்) நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் யாரையாவது ஒருத்தரை காப்பாற்ற வேண்டும் என்றால் யாரை காப்பாற்றுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த ஜீவா, நான் ஜெய்யை காப்பாற்றுவேன், அவர் தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார் என்று கூறியதும், அது இந்த ஆப்ஷனில் இல்லை ‘ஆர்யா’ விஷால் ஜெயம் ரவி இந்த மூணு பேரில் யாரை காப்பாற்றுவீர்கள் என்று கூறினார் தொகுப்பாளினி. இதற்கு பதில் அளித்த ஜீவா, ஆர்யா குடிக்க மாட்டான்.

இதையும் பாருங்க : நாட்டு சரக்கு பாடல் நடிகை தாரிகாவ ஞாகபம் இருக்கா ? நீச்சல் உடையில் கூட நடித்துள்ளார் பாருங்க.

- Advertisement -

எனவே, விஷாலை தான் கேசில் இருந்து காப்பாற்றுவேன். ஆனால், மூணு பேரும் எந்தெந்த கேசில் மாட்டுவார்கள் என்று சொல்லலாம். ஆர்யா பெண்கள் சமந்தபட்ட விஷயத்தில் தான் மாட்டுவான். அப்படி ஆகிவிட்டது தானே. அவன் பெண்ணை காப்பாற்றப் போய் அங்கு எதாவது பிரச்சனை ஆகி இருக்கும் என்று கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-65.jpg
ஆர்யா மீது புகார் அளித்த பெண்

ஜீவா சொன்னது போல தான் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா மீது திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் சிபிசிஐடியிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன் வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க காலம் அவகாசம் சிபிசிஐடி கோரியதை அடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement