தளபதி விஜய்க்கு பிராங்க் கால் செய்த பிரபல நடிகர். தற்போது வைரலாகும் பழைய வீடியோ.

0
6242
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து இருக்கும் படம் மாஸ்டர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் ஜீவா அவர்கள் விஜய்க்கு பிராங்க் கால் செய்து பேசி உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே விஜய் அவர்களுக்கு பிராங்க் கால் செய்து பேச பல நடிகர்கள் பயப்படுவார்கள். ஆனால், நடிகர் ஜீவா அவர்கள் கால் செய்து பேசி உள்ளார். 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் நடிகர் ஜீவா அவர்கள் விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் ஜில்லா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஜீவா விஜயுடன் இணைந்து நடனம் ஆடி இருக்கிறார். மேலும், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா வர்கள் விஜய்க்கு பிராங்க் கால் செய்து பேசி உள்ளார். பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள படம் “சீறு”. இந்த படத்திற்கு டி. இமான் அவர்கள் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா அவர்கள் “83” என்ற ஒரு படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வாமாக தகவல்கள் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement