சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர் ஜீவன்.! இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

0
2831
- Advertisement -

தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

-விளம்பரம்-
Related image

அந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பின்னர் ஹீரோவாக நடித்த மச்சக்காரன் போன்ற படங்கள் தோல்விப்படமாக அமைந்தது.

- Advertisement -

இறுதியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜீவன் 4 ஆண்டுகளுக்கு பிறகு அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும், இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளது.

-விளம்பரம்-
Advertisement