பாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ஜிதேந்திரா. இவருக்கு தற்போது 75 வயதாகிறது. 70 மற்றும் 80களில் பாலிவுட்டில் இவர் ஒரு முன்னணி நடிகராக விளங்கியவர் இவர். நல்ல நடிகராக இருந்தவர் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் ஜிதேந்திரா.
இவருக்கு சோபா என்ற மனைவி இருக்கிறார். ஜிதேந்திரா தனக்கு 32 வயது இருக்கும் போது சோபாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது சோபா ஒரு பள்ளிகல்வி முடித்த பெண் ஆவார். வெறும் 14 வயதே ஆன சோபாவை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜிதேந்திரா.
தற்போது அவர் மீது வேறு இரு வித்யாசமான சர்ச்சை உருவாகி உள்ளது. ஜிதேந்திராவிற்கு 28 வயது இருக்கும் போது தனது கசின் சிஸ்டரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது சிம்லாவில் உள்ள கசின் சிஸ்டர் ஈமெயில் மூலம் புகார் செய்துள்ளார். அவருக்கு 28 வயது 1, இருக்கும் போது 1970ல் என்னை அவரது சூட்டிங் நடக்கும் ஹோட்டல் அறைக்கு வர சொன்னார். அங்கு குடி போதையில் இருந்த என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் செய்துள்ளார் அவரது கசின் சிஸ்டர். 47 வருடம் கழித்து இந்த புகாரை அளித்திருந்தாலும் இதனை விசாரிக்க திட்டமிட்டுள்ளார் போலீசார். ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என மரூர்த்துள்ளார் ஜிதேந்திரா.