அப்போ அசிங்கமா பேசினா அவார்டு வாங்கலாமான்னு என் குழந்தை கேக்குறா - ஜி பி முத்து மீது பிரபல நடிகர் போலீசில் புகார்.

By Rajkumar · 6/8/2021

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காதல் பட நடிகர் காதல் சுகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் காதல், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சுகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சமூகவலைதளத்தில் ஆபாசமாக பேசும் ரவுடி பேபி சூர்யா ஜி பி முத்து இலக்கியா போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=t9eKRx57QZ8&t=12s

அந்த பேசிய சுகுமார் சினிமாவை பொறுத்தவரை சென்சார் என்ற ஒரு விஷயம் இருக்கிறது அதில் அவதூறான வார்த்தைகளை நீக்கி விடுவார்கள் ஆனால் யூடியூப் வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற சென்சார் எல்லாம் கிடையாது இந்த வீடியோக்களை எல்லாம் பார்த்து சிறுவர்கள் தவறான வழியில் சென்று விடுவார்கள் ஒரு சில சேனல்கள் அவர்களை அழைத்து விருது கொடுக்கிறார்கள் இதைப் பார்த்த என்னுடைய மகள் கேட்கிறாள் நானும் இதுபோன்று ஆபாசமாக பேசினால் எனக்கும் விருது கொடுப்பார்களா என்று என பேசி இருந்தார் சுகுமார்.

இதையும் பாருங்க : இந்தா வந்துட்டாங்கல இப்படி - கிளாமர் காட்ட துவங்கிய அனிகாவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து உள்ளிட்ட சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் சுகுமார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் படித்து வருகின்றனர். குழந்தைகளை நல்வழியில் கொண்டு செல்லும் விதமாக சமூகவலைதளத்தில் ஜி பி முத்து, இலக்கியா, ரவுடிபேபி உள்ளிட்ட நபர்கள் ஆபாசம் நிறைந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=MMhdW-X3hc0

இது தொடர்பாக என்னுடைய நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், மேலும் இது தொடர்பாக நானும் ஊடகங்களில் பேசியிருந்தேன். நான் பேசிய கருத்துக்களால் என்னை நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி பி முத்து போன்றவர்கள் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து விடுக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுத்து வரும் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார் காதல் சுகுமார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full