இந்தா வந்துட்டாங்கல இப்படி – கிளாமர் காட்ட துவங்கிய அனிகாவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
5665
anika
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை, தற்கொலை எண்ணம் – சாமியாராக மாறியுள்ள நடிகை மோகினியின் தற்போதைய நிலை.

- Advertisement -

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் முன்னாள் சிறு ஓபன் இருக்கும்படி ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், என்னது, ஓ கடவுளே, குட்டி நயன், இந்தா வந்துட்டாங்கல இப்படி, என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement