ரஜினி சொன்ன கதை குறித்து நடிகர் காதல் சுகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை ரோலில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார்.

அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், விசிடி, என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார்.

Advertisement

சுகுமார் திரைப்பயணம்:

இவர் 2015 ஆம் ஆண்டு ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் 2016 ஆம் ஆண்டு “சும்மா ஆடுவோம்” என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி இருந்தார். இருந்தாலும், இவரின் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஸ்டார். இந்த படத்தில் அதிதி போங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இளன் இயக்கி இருக்கிறார்.

ஸ்டார் படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும், 10 வருடங்களுக்குப் பிறகு சுகுமார் ஸ்டார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி குறித்து சுகுமார் கூறியிருந்தது, படையப்பா படத்திற்கு பிறகு ரஜினி அவர்கள் ஒரு மூன்று வருடமாக படம் பண்ணவில்லை. அவர் பாபா படம் பண்ணும் போது தான் நான் காதல் படம் நடித்தேன்.

Advertisement

சுகுமார் அளித்த பேட்டி:

அந்த படத்துக்காக என்னை அழைத்திருந்தார். அப்போது நான் டிவியில் பிரபலமாக இருந்தேன். அருணாச்சலம் ஹெஸ்ட் ஹவுஸில் சுரேஷ் கிருஷ்ணாவை நான் சந்தித்தேன். அப்போது அவர் மேல போய் உட்காருங்கள் என்று சொன்னார். நான் யாரோ கதை சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அதன் பின் ரஜினி தான் கதை சொல்ல போகிறார் என்று தெரிந்தது. நான் அவர் சொல்லும் போது கண்ணை சிமிட்ட இல்லை. அப்போது ,சுகுமார் பாபா படத்தில் நீங்கள் ஒரு கேரக்டர் பண்றீங்க, செந்தில் சார் உங்களுடைய குரு. நீங்கள் அவர் சிஷ்யன் என்று ஒரு 20 நிமிஷம் கதை சொன்னார்.

Advertisement

ரஜினி சொன்ன கதை:

பிறகு என்னிடம் ஓகேவா என்று கேட்டார். நான் எங்க கதையை கேட்டேன், அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்த பிறகு ரஜினி சாரிடம் என்னை எல்லாம் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்,நான் உங்களை டிவியில் எல்லாம் பார்த்திருக்கிறேன். வடிவேலு மாதிரி பண்ணுவீங்களே என்று சொன்னார். அதெல்லாம் எப்ப சார் பார்த்தீங்க என்று கேட்டதும் நான் மூன்று வருடம் சும்மா இருந்தேன். ஜூனியர் என்டிஆர் படம் தெலுங்கில் கமிட் ஆனதால் என்னால் பாபா படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார்.

Advertisement