மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி – வெளியான டெஸ்ட் ரிப்போர்ட் (குஷ்பூக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணிட்டு இருந்தார் )

0
2071
karthi
- Advertisement -

பிரபல நடிகரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் நடிகர் ஒருவர் பழம்பெரும் நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் தமிழ் சினிமாவில் என்பது காலகட்டத்தில் இருந்து ஒரு பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார் 80 முதல் 90 காலகட்டங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் கார்த்தி.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்த வந்த கார்த்தி பல நடிகர்களின் படத்தில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியான ‘தேவ்’ படத்தில் ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது நடிகர் பிரஷாந்த் நடித்து வரும் ‘அந்தாகன் ‘ படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் துவங்கியது.

- Advertisement -

நடிகர் கார்த்தி நடிகராக மட்டுமல்லாமல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி தனக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததாகவும் எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகை குஷ்பூ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் நேற்று(மார்ச் 20) இரவு பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கார்த்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலில் அவருக்கு ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தோற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement