அஜித்தை போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கார்த்தி – பொன்னியின் செல்வன் படத்திற்காகவா ?

0
1518
- Advertisement -

தமிழ் சினிமாவில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நரைத்த முடியில் நடித்திருந்தாலும் அஜித் தன்னுடைய தலைமுடிக்கு எந்தவித டையும் அடிக்காமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்த பின்னர் தான் இந்த கெட்டப் பெரிதும் பிரபலம் அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அஜித்திற்கு பின்னர் எத்தனையோ நடிகர்கள் இதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பின் தொடர்ந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் இளையதளபதி விஜய் கூட பிகில் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து இருந்தது படு மாஸாக இருந்தது. அந்த வகையில் தற்போது இதே லுக்கை பின் தொடர்ந்து இருக்கிறார் நடிகர் கார்த்தி.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

- Advertisement -

பின் இவர் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்தார். அதிலும் கார்த்திக்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது. இதனை தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி இறுதியாக தம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நடிகர் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மணிரத்னம் இயக்கிவரும் வரலாற்று சிறப்புமிக்க படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். எனவே, இந்த கெட்டப் சுல்தான் அல்லது பொன்னியின் செல்வன் படத்திற்கான கெட்டப்பா இல்லை அஜித்தைப் போல நடிகர் கார்த்தியும் இயல்பான தோற்றத்தில் இருக்க ஆசைப்பட்டு இப்படி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement