முதன்முறையாக தன் அழகான மனைவி ,மகளை வெளியுலகத்துக்கு காட்டிய கருணாகரன் ! புகைப்படம் உள்ளே!

0
2608
karunagaran
- Advertisement -

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்தார். அந்த படத்திற்கு பிறகு பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் மட்டும் 12 கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். நடிகர் கருணாகரன், 2013 ஆம் தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

-விளம்பரம்-

சமூக வலைத்தளத்தில் அக்ட்டிவாக இருக்கும் நடிகர் கருணாகரன், அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார். ஆனால், சமீபத்தில் தான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement