நிதி கொடுத்த விஜய் செயலை கேலி செய்த சர்ச்சை - கருணாகரன் விளக்கம்.

By Rajkumar · 27/4/2020

காமெடி நடிகர் கருணாகரன் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு உண்டான மோதல் குறித்து நாம் அனைவருமே அறிவோம். சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துகளை கேலி செய்து சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார் நடிகர் கருணாகரன். இதனால் இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மோதல் வெடித்தது ஒரு கட்டத்தில் அவருக்கு கொலை மிரட்டல் கூட வந்ததாக இவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து விஜய் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார் கருணாகரன்.

https://twitter.com/BlackPr65695570/status/1253265657568821250

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த விஜயை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் கருணாகரன் ட்வீட் செய்திருப்பதாக சமூகவலைதளத்தில் வந்த செய்தியால் மீண்டும் கருணாகரனை விஜய் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள். கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் அவர்கள் ரூ. 1.30 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கி இருந்தார்.

இதையும் பாருங்க : ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு பதில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது தான். முழு வீடியோ இதோ.

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவியாக வழங்கி இருந்தார். புதுச்சேருக்கு நிதி உதவி அளித்த விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

மேலும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி அந்த வீடியோவில் விஜய்யை போல மற்ற நடிகர்களும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த செய்தி சமுக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த செய்தியை விமர்சிக்கும் விதமாக நடிகர் கருணாகரன் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கில் இருந்து `Same Salary Please' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த டீவீட்டால் நடிகர் கருணாகரனை மீண்டும் விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சர்ச்சை ட்வீட் குறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகர் கருணாகரன். அதில், என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அபாயகரமான சூழலில் சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து செய்திகளையும் மக்கள் நம்பி விடுகிறார்கள். நான் சமூகவலைதளத்தில் விட்டு வெளியே வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. விஜய் குறித்து நான் பதிவிட்டு இருந்ததாக வெளியாகியுள்ள அந்தப் பதிவை நான் செய்யவில்லை. அது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். என்னுடைய பெயரில் வேறு யாரோ ட்விட்டர் கணக்கை உருவாக்கி இதை செய்து உள்ளார்கள். விஜய் மீது மிகப்பெரிய அன்பும் மரியாதையும் கொண்டவர் நான் இக்கட்டான சூழலில் மக்களுக்கு அவர் செய்துள்ள உதவி மிகப் பெரியது என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full