‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு பதில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது தான். முழு வீடியோ இதோ.

0
12186
aboorva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் கமலஹாசன். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் இவரை உலக நாயகன் என்று தான் அழைக்கிறார்கள். இவரின் வித்தியாசமான நடிப்பு திறமையின் மூலம் சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. உலக திரைப்பட வரலாற்றிலேயே குள்ள தோற்றம் போட்டு நடித்தவர் கமலஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்த படத்திற்காக இவர் நிறைய விருதுகளை வாங்கி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : சூர்யா குடும்பம் மட்டும் வாழணும், 25,000 குடும்பங்கள் அழியணுமா – கொதிக்கும் திரையரங்க சங்கம்.

- Advertisement -

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை’ என்ற ஒரு பாடல் என்ற பாடல் இடம் பெற்று இருக்கும். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், அந்தப் பாடலுக்கு பதில் ‘அட உங்க அம்மா வா பார்த்த காலைத் தொட்டுக் கும்பிடுவேன்’ என்ற பாடல் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை காந்திமதி அவர்கள் நடித்திருந்தார்கள்.

ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை. அதே போல் நடிகைகாந்தி மதி அவர்களும் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு அம்மாவாக மனோரமா நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை ஆனால், இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் ஒளிபரப்பப் பட்டது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : தன்னுடைய உடையை மகனுக்கும், மகன் உடையை தானும் போட்டு ஆட்டம் போட்ட வரலாறு பட நடிகை.

-விளம்பரம்-

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்தியன் 2 படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.

Advertisement