விஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.
விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்து வருகின்றனர் இருப்பினும் கருணாகரன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.
கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கு ட்விட்டர் போர் ஒருபுறம் இருக்க ஒரு சில விஜய் ரசிங்கர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கியுள்ளார். விஜய் ரசிகர்களிம் மன்னிப்பு கேட்கும் வரை உன்னை விட மாட்டோம் என்று கருணாகரனை திட்டி தீர்த்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.




