அட கொடுமையே கருணாஸா இது – கொரோனாவிற்கு பின் கருணாஸ் வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்.

0
1740
karunas
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகரும் எம் எல் ஏவுமான கருணாஸிற்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தனக்கு கொரோனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கருணாஸ். அதில், கருணாஸ் ஆகிய நான் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று நலமோடு இருக்கிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களோடு அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கான அரசு மருத்துவமனையில் இருக்கிறேன்.

- Advertisement -

உயர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவம், கனிவான பணிவிடை, ஆறுதல் தரும் வார்த்தை, ஆரோக்கியமான உணவு, துப்புரவு பணியாளர்களின் தூய்மையான பணி, சுத்தமான காற்று, மன அமைதி தரும் அழகான இடம் நான் இருக்கும் இருக்கும் அரசு மருத்துவமனை.மக்களோடு மக்களாக தொகுதி மேம்பாட்டு பணிகளில் பங்கேற்ற எனக்கு கண்ணுக்குத் தெரியாத கொரோனா தொற்றிக் கொண்டது. இப்போது நான் தேறி வருகிறேன்.

COVID-19 positive Karunas' emotional statement from hospital

என்னைத் தேற்றிய தமிழக முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், ஊட்டச்சத்தான வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்திய தொகுதி மக்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நான் சார்ந்த என் முக்குலத்தோர் புலிப்படைக்கும் சட்டமன்ற உறுப்பினராய் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement